அபிநந்தன் புகைப்படத்துடன் கூடிய தேர்தல் விளம்பரம் : நீக்க உத்தரவு...!

Report Print Abisha in இந்தியா

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் புகைப்படத்துடன் கூடிய பாஜக எம்எல்ஏ-வின் 2 விளம்பரங்களை நீக்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில், மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. முன்னதாக, அரசியல் கட்சிகள் தங்களின், தேர்தல் பிரச்சாரத்துக்காக பாதுகாப்புப் படை வீரர்களையோ விளம்பரங்களில் அவர்களது புகைப்படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், தேர்தல் திகதி அறிவித்த பின்னரும், டெல்லியின் விஸ்வாஸ் நகர் தொகுதி பாஜக எம்எல்எ-வான ஓம் பிரகாஷ் சர்மா, தனது பேஸ்புக் பக்கத்தில் 2 விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.

அதில், “அபிநந்தன் நாடு திரும்பியது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி”, என்றும் குறிப்பிட்டு அபிநந்தனின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து ‘சிவிஜில்’ என்ற செயலி மூலம் தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தற்போது அவரை விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும் இந்த 2 விளம்பரங்களையும் உடனடியாக நீக்குமாறு, பேஸ்புகின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியா இயக்குநர் ஷிவ்நாத் துக்ராலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்