கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண் மருத்துவர்... சிசிடிவியால் சிக்கிய ஆண் மருத்துவர்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இளம்பெண் மருத்துவர் வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த சம்பவத்தில் ஆண் மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லியை சேர்ந்தவர் கரிமா மிஸ்ரா (25). மருத்துவரான இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கரிமா சடலமாக கிடந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் விசாரித்த நிலையில் கரிமா அருகில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தி உடைக்கப்பட்ட நிலையில் இரத்தம் படிந்து இருந்தது.

மேலும் கரிமா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் மருத்துவர் சந்திர பிரகாஷ் மாயமானதும் தெரியவந்துள்ளது.

சிசிடிவி கமெராவை ஆய்வு செய்த போது சந்திர பிரகாஷ் வீட்டிலிருந்து பையுடன் வெளியில் சென்றது உறுதியானது.

இதையடுத்து சந்திர பிரகாஷின் செல்போன் சிக்னலை வைத்து உத்தரகாண்டில் அவரை பொலிசார் இன்று கைது செய்தனர்.

பொலிசார் கூறுகையில், நாங்கள் சந்திர பிரகாஷை பிடிக்க முயன்ற போது அருகில் இருந்த கால்வாயில் குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர் அவரை மீட்டு கைது செய்தோம், கரிமாவை கொலை செய்ததை சந்திர பிரகாஷ் ஒப்பு கொண்டுள்ளார்.

கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கரிமா, சந்திர பிரகாஷை நல்ல நண்பராகவே பார்த்துள்ளார், சம்பவத்தன்று இருவருக்கும் ஏதோ ஒரு விடயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கரிமாவை சந்திர பிரகாஷ் கொன்றிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்