இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்... திடீரென்று சிறையில் அடைக்கப்பட்ட நந்தினி! என்ன காரணம்?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இளம் பெண் மற்றும் அவரின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், சட்டக்கல்லூரி மாணவி மதுரையைச் சேர்ந்த நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் இதற்கான வழக்கு விசாரணை நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில் ஐபிசி 328-ன் படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா? என நந்தினி, நீதிபதியிடம் வாதாடினார்.

இதனால் நந்தினி மற்றும் அவரது தந்தை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நந்தினிக்கு திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கவிருக்கும் நிலையில், அவர் மற்றும் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்