ட்விட்டரில் லைக்ஸ் அள்ளும் பிரியங்கா காந்தியின் புகைப்படம்

Report Print Vijay Amburore in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் தங்கையுமான பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பாக பெண்கள் பலரும் சேலை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை கொண்டாடும் விதமாக கடந்த சில நாட்களாகவே பெண்கள் பலரும் சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாரி டுவிட்டர் என்ற ஹேஸ்டேக் மூலம் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் தங்கையுமான பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய திருமண நாளில் அணிந்திருந்த பட்டுபுடவையின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்