சடலமாக கிடந்த கோடீஸ்வரர்! இளம் மனைவியே கொன்றது அம்பலம்.. வழக்கில் ஏற்பட்ட திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா
827Shares

இந்தியாவில் கோடீஸ்வர கணவரை கொலை செய்த வழக்கில் கைதான இளம் மனைவிக்கு ஜாமீன் கொடுக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி திவாரி மகனும், கோடீஸ்வரருமான ரோகித் திவாரி (39) கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி தனது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பான விசாரணையில் ரோகித்தின் மனைவி அபூர்வா அவரை கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அமுக்கியும் கொலை செய்தார் என்பது உறுதியானது.

மேலும் கணவரின் சொத்துக்கள் மற்றும் அரசியல்வாதியான அவர் மூலம் அரசியலில் பெரிய இடத்தை அடையலாம் என கணக்கு போட்டுள்ளார் அபூர்வா.

ஆனால் ரோகித்துக்கு அவர் மைத்துனியுடன் தொடர்பு இருப்பதாக கருதிய அபூர்வா அவருக்கு பிறந்த மகனும் ரோகித்துடையது என நினைத்தார்.

இதனால் கணவரின் சொத்துக்கள் அவர்களுக்கு போய்விடுமோ என அஞ்சி அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் அபூர்வாவை கைது செய்தனர். மேலும் அவர் மீதான இறுதிக்கட்ட குற்றப்பத்திரிக்கை கடந்த 18ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என அபூர்வா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் வந்தது.

அபூர்வாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்