பல் வலியால் துடித்த சிறுவன்.. ஸ்கேன் செய்து பார்த்தபோது கண்ட ஆச்சரிய காட்சி!

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் ஏழு வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த 526 பற்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கி சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பிரபுதாஸ் என்பவரின் மகனுக்கு, 3 வயது முதல் வாயின் வலது பக்கத்தில் வீக்கமாக இருந்துள்ளது. ஆனால், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவனுக்கு 7 வயதாகியபோது வாயில் அதிக வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரபுதாஸ் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, வாயின் வீங்கிய பகுதியில் நூற்றுக்கணக்கான பற்கள் இருந்தது தெரிய வந்ததைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

பின்னர் சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 5 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் அவனது வாயில் இருந்து பற்கள் அகற்றப்பட்டன. அவற்றில் சிறிதும், பெரிதும் என மொத்தம் 526 பற்கள் இருந்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்