நடக்க முடியாத முதியவருக்காக காவல் ஆய்வாளர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. குவியும் பாராட்டு!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நடக்க முடியாத முதியவரை தனது முதுகில் சுமந்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கடும் மழை வெள்ளம் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், காலில் முறிவுக்கு கட்டுப் போட்டிருந்த முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டார்.

இதனைக் கண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகமல்லு அவருக்கு உதவ நினைத்துள்ளார். சற்றும் யோசிக்காத அவர், முதியவரை தனது முதுகில் சுமந்து தண்ணீரில் நடந்து சென்றார். மறுமுனையில் தரையில் அவரை இறக்கிவிட்ட நாகமல்லுவை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவானது. இந்நிலையில், இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் நாகமல்லுவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்