மகளுக்கு திருமணம் நடக்கவில்லையே...கண்ணீருடன் சிறைக்கு திரும்பிய நளினி -நெஞ்சை உருக்கும் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

மகள் திருமண ஏற்பாட்டுக்காக பரோலில் நளினி வெளியில் வந்த நிலையில், அது தொடர்பான விடயம் முடிவடையாததால் கண்ணீருடன் மீண்டும் சிறைக்கு திரும்பிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவர்களுடைய மகள் ஹரித்ரா லண்டனில் மருத்துவம் படித்து வருகிறார்.

அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில் கடந்த யூலை மாதம் 25-ந் திகதி அவர் சிறையில் இருந்து வெளியே வந்து சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது அவர் தனது பரோலை நீட்டிக்கக்கோரி மனுதாக்கல் செய்தார். அதன்படி அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது.

அவருடன், அவருடைய தாயார் பத்மாவதி தங்கியிருந்தார். நளினியின் தம்பி பாக்கியநாதன், தங்கை கல்யாணி, பாக்கியநாதனின் மகள் கவிநிலவு ஆகியோரும் அவ்வப்போது வந்து நளினியுடன் தங்கியிருந்தனர். பரோலில் வந்திருந்த நேரத்தில் ஆண்கள் சிறையில் இருக்கும் தனது கணவர் முருகனை அவர் 3 முறை சந்தித்து பேசி உள்ளார்.

அவருடைய மகள் ஹரித்ரா லண்டனில் இருந்து வேலூருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. மேலும் பரோல் வழங்கிய நேரம் ஆடி மாதம் என்பதால் மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நளினியின் பரோல் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அவர் பலத்த பொலிஸ் காவலுடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட நளினி பொலிஸ் வேனில் ஏறியபோது தாய், தம்பி, தங்கை ஆகியோரை பார்த்து கையசைத்தார்.

அப்போது அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

சரியாக மாலை 4 மணிக்கு வேலூர் பெண்கள் தனிச்சிறைக்குள் அழைத்து செல்லப்பட்டார்.

நளினி மகள் ஹரித்ரா தற்போதைக்கு தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், தாய் - தந்தை சிறையில் இருந்து நிரந்தரமாக விடுதலையான பின்னரே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்