திருமணமான நான்கு மாதத்தில் மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன்... அதனால் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான நான்கு மாதத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவரும் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் தேவி. இவர் மகள் லோகேஷ்வரிக்கும் உறவினரான அன்பு (27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

லோகேஸ்வரி தனது கணவர் அன்புவுடன் எளாவூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 15-ந் திகதி தனது தாய் வீட்டில் லோகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சணை கேட்டும், சந்தேகப்பட்டும் லோகேஸ்வரியை அவரது கணவர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அதனால்தான் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், கடந்த 15ஆம் திகதி தாய் வீட்டில் இருந்த லோகேஸ்வரியிடம் நேரில் வந்து அவரது கணவர் அன்பு தகராறு செய்ததாகவும், அதனால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் லோகேஸ்வரியின் கணவர் அன்பு, ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் சந்தேகம் மற்றும் வரதட்சனை கொடுமையால் மனைவி தற்கொலை செய்ய, விசாரணைக்கு பயந்து கணவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்