சுர்ஜித் செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்த தம்பதி! வீட்டு கழிவறையில் உயிரிழந்த குழந்தை

Report Print Raju Raju in இந்தியா

சுர்ஜித் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த தம்பதி தங்கள் குழந்தையை இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த லிங்கேஷ்வரன் - நிஷா தம்பதிக்கு ரேவதி சஞ்சனா (2) என்ற குழந்தை உள்ளது.

இந்நிலையில் இந்த தம்பதி நேற்று மாலை தொலைக்காட்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் தொடர்பான செய்தியை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது ரேவதி மாயமாகவே அக்கம் பக்கத்தில் லிங்கேஷ்வரனும் நிஷாவும் அவளை தேடினர்.

பின்னர் தனது வீட்டின் கழிவறையை திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் கேனுக்குள் குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்