சசிகலாவின் விடுதலை... அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடர் கணித்து கூறிய பல தகவல்கள்

Report Print Santhan in இந்தியா
1820Shares

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில், அடுத்து அவர் கை காட்டும் நபரே முதல்வர் என்று பிரபல ஜோதிடர் கணித்து கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ளார்.

அவர் விடுதலையான பின்பு, அவரின் தலைமையில், தன் மகளின் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கு டி.டி.வி தினகரன் திட்டமிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி சசிகலாவின் வருங்கலாம் குறித்து ஜோதிடர்களிடம், அவரின் நெருங்கிய வட்டாரங்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பெற்று, ஆட்சியில் உட்காரமாட்டார். மருத்துவமனை அல்லது சிறைச்சாலையில் இருப்பார் என்று கூறியவர் தான், பிரபல ஜோதிடர் ஷத்குரு.சாந்தகுமார்.

தற்போது இவர் விடுதலையாகவுள்ள சசிகலாவின் ஜாதம் குறித்து கூறுகையில், சசிகலா மீன ராசி ரேவதி நட்சத்திரம் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து இவருக்கு சனி 10-ல் வந்து அமர்ந்தாலே மிகப்பெரிய துன்பத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

அதனால் தான் 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறைவாசம், கணவர் மரணம், தாலி பாக்கியம் பறிபோகும் பதவி பறிப்பு ஆகியவை நடந்திருக்கும்.

கடந்த 4 ஆண்டுகளில் இவர் சந்தித்த அவமானங்கள் துன்பங்கள் ஏராளம். பட்ட துன்பங்கள் அவமானங்கள் எல்லாம் அப்படியே தலைகீழாக மாறி மிகப்பெரிய அளவிற்கு அரசியல் அதிகாரம் மனதில் சந்தோசம் அவமானப்படுத்தியவர்கள் மண்டியிடுவது ஏன் இவர் கைகாட்டும் ஆள்தான் முதல்வராகும் அளவிற்கு சக்தி படைத்தவராக வலம் வருவார் என்று கூறியுள்ளார்.

ஏனெனில், அக்டோபர் 27-ஆம் திகதி குருபெயர்ச்சி வருகிறது. இவரது ஜாதக கட்டத்தில் குரு 11-ஆம் இடத்தில் அமருகிறார்.

இது லாபஸ்தானம் ஆகும். இது ஜோதிட சாஸ்திரத்தில் அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை குருபகவான் கொடுப்பார்.

குரு பார்க்க கோடி நன்மை. ஆகையால் அரசியலில் இருந்த வந்த எதிரிகள் எல்லாம் ஓடி ஓழிவார்கள். மனதில் சந்தோஷம். கட்டளையிடுதல். அழகு. உடலில் தெம்பு. விவசாய நிலங்கள் செழிப்படையும், அரசியலில் மிகப்பெரிய பதவிகள் தேடி வரும் என்பது நிதர்சனமான உண்மை.

வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி கிரகங்களும் இவருக்கு சாதகமாகவே அமைகிறது. இப்படி 4 கிரங்கள் சசிகலாவுக்கு சாதகமான சூழ்நிலைக்கே வருகிறது.

இதனால் வரும் அக்டோபர் 27-ஆம் திகதி முதல் சசிகலாவுக்கு வசந்தகாலம் என்றே சொல்லலாம், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவர் கை காட்டும் ஆட்களே ஆட்சி அதிகாரத்தில் அமர வாய்ப்புள்ளது.

மக்கள் செல்வாக்கு மிக்க தலைவியாக வருவார். இவரின் வருகை அதிமுகவிற்கும் சரிவை தரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்