திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை! மனைவி செய்த மோசமான செயல்.. அவமானத்தில் தற்கொலை செய்த கணவன்

Report Print Raju Raju in இந்தியா
4563Shares

இந்தியாவில் மனைவி வீட்டை விட்டு ஓடியதால் அவமானமடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அம்ரிட்பால் சிங். இவருக்கும் அமதீப் கவுர் என்ற பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத சூழலில் கவுர் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.அங்கு மனைவியை விவாகரத்து செய்த பகதூர் என்பவரும் பணியாற்றி வந்தார்.

இதையடுத்து கவுருக்கும், பகதூருக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி தனது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு உணவில் தூக்க மாத்திரையை கவுர் சில தினங்களுக்கு முன்னர் கலந்து கொடுத்துவிட்டு வீட்டை விட்டு தப்பியோடினார்.

பின்னர் காலையில் எழுந்த அம்ரிட்பால் மனைவி காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து பொலிசில் தகவல் கொடுத்தார்.

மேலும் கவுர் தனது காதலனுடன் ஓடி போனதையும் அறிந்து துடித்து போனார்.

20 நாட்கள் ஆகியும் மனைவியை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவமானத்தில் இருந்த அம்ரிட்பால் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்