கணவர்மார்களே உஷாரா இருங்க! உங்கள் துணையின் கால் உங்கள் தலையெழுத்தை மாற்றுமாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

பெண்களின் உடலில் அவர்களின் பாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது.

ஏனெனில் அதில் உள்ள குறியீடுகள் அவர்கள் கணவரின் விதியையே மாற்றக்கூடும் சக்தி உடையவை.

பெண்ணின் பாதம் அவள் கணவரின் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

உள்ளங்கால்

ஒரு பெண்ணின் உள்ளங்காலில் சக்ரா, துவாஜா அல்லது ஸ்வஸ்திக் போன்ற குறியீடுகள் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமாகும்.

அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆண் வாழ்வில் அனைத்து வசதிகளையும் பெற்று மன்னன் போல வாழ்வான், தன் மனைவியையும் ராணியாக நடத்துவான்.

கால் விரல்கள்

பெண்ணின் இரண்டாவது கால் விரலானது மற்ற விரல்களை விட பெரியதாக உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் மிகவும் துர்பாக்கியசாலிகள் என்றே கூறவேண்டும்.

திருமணத்திற்கு முன்பான அவர்களது வாழ்க்கை ஆண்களின் அமைதியையும், குடும்பத்தின் நிம்மதியையும் திருமணதிற்கு பின் கெடுத்துவிடும்.

பொதுவாக இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வது குடும்பத்திற்கு ஏற்றதல்ல என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

பெரு விரலுக்கு ஒரு கோடு செல்வது

பெண்ணின் பாதத்தில் சுண்டு விரலுக்கு கீழே இருந்து பெரு விரலுக்கு ஒரு கோடு செல்வது போல் இருந்தால் அந்த பெண் மிகவும் புனிதத்துவம் வாய்ந்தவளாக இருப்பாள்.

அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆணின் வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் குவிந்திருக்கும்.

விரல்களுக்கிடையேயான இடைவெளி

பெண்ணின் கட்டை விரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையே இடைவெளி குறைவாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதுவே இடைவெளி அதிகமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் காதல் இறுதிவரை நிலைத்திருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்