வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் உண்டாகும் அற்புத மாற்றங்கள்

Report Print Kabilan in மருத்துவம்

வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலமாக கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

வெயில் காலத்தில் உடல் வெப்பத்தினை தணிக்க, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து பராமரிக்கப்படும்.

  • வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். எனவே, இதனை பொடி செய்து நீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
  • வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இதய நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும். மேலும் இது கொலஸ்ட்ரால் அளவையும் குறைப்பதனால் இதய பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இல்லை.

  • நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, அதில் உள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியை தூண்டும்.
  • வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இதனால் வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
  • வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச் சத்துக்கள் ஆகியவை செரிமான பிரச்சனையை சரிசெய்யும். வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வர வேண்டும்.
  • இதன்மூலம், செரிமான பிரச்சனைகள் மற்றும் அல்சர் ஆகியவை நீங்கும்.

  • வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்கும். அத்துடன் நீண்ட நேரம் பசி எடுக்காத உணர்வை தரும்.
  • வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும். இதன்மூலம் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
  • வெந்தயம் கல்லீரலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் ரத்தத்தை சீராக பாய உதவும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் மேம்படும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers