வெள்ளைப்படுதலுக்கு தீர்வு!.. இன்னும் பல நன்மைகள்

Report Print Fathima Fathima in மருத்துவம்

சிறு தானிய வகைகளில் அதிக சத்துக்களை கொண்டது கேழ்வரகு, இதில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.

வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.

பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கலாம்.

பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்கிறது.

உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.

வெள்ளைப்படுதல் நோய்க்கான தேநீர்

கேழ்வரகு கதிரில் உள்ள இலை தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும். வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...