சிரியா போர்க்களம்: இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுமி; மனிதை உருக வைக்கும் வீடியோ!

Report Print Basu in ஏனைய நாடுகள்

சிரியா போர்க்களத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய ஐந்து வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு வீடியோவாக வெளியாகி அனைவரின் மனதையும் உருகவைத்துள்ளது.

சமீபத்தில் அலெப்போ மாகாணத்தில் நடந்த விமான தாக்குதலில் பல பகுதியில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், ராவான் என்ற ஐந்து வயது சிறுமி இடிபாடுகளில் சிக்கி இருந்ததை ஒருவர் கண்டுள்ளார்.

பின்னர், மிக கடுமையாக போராடி சிறுமியை பலத்த காயங்களுடன் மீட்ட மீட்பு குழுவினர் அவரை சிகிச்சைக்காக மருத்தவமனைக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்பகுதியில் நடந்த விமான தாக்குதலில் சிறுமியின் பெற்றோர், மூன்று சகோதரிகள், சகோதரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், மருத்துவமனையில் இருக்கும் சிறுமியின் நிலைமை குறித்து தெளிவான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments