சமூகவலைதள நட்பு... 9 பேரை கொடூரமாக கொலை செய்த இளைஞர்: திகில் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஜப்பான் நாட்டில் டுவிட்டர் பக்கத்தில் சந்தித்துக் கொண்ட ஒன்பது பேரை இளைஞர் ஒருவர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவத்தில் பொலிசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில், Takahiro Shiraishi என்ற 27 வயது இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஒன்பது பேரின் உடல் பாகங்களை மறைவு செய்துள்ள இடங்களையும் பொலிசாருக்கு காண்பித்துள்ளார்.

நாட்டில் தற்கொலை எண்ணம் கொண்டவர்களை குறிவைத்து, தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அவர்களுக்கு உதவுவதாக இவர் வாக்குறுதி அளித்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த கொலைகார இளைஞரை கைது செய்த பின்னர் பல மாதங்கள் உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு தயார் செய்துள்ளனர்.

23 வயது இளம்பெண் ஒருவர் மாயமான வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த இளம்பெண்னுடன் Shiraishi காணப்பட்டதற்கான கமெரா காட்சிகளை கண்டெடுத்துள்ளனர்.

அந்த காமெரா காட்சிகளே குறித்த இளைஞரின் குடியிருப்பில் உள்ள பல குளிர்சாதன பெட்டிகள் மீது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த குடிய்ரிப்புக்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார், அந்த பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 உடல்களை கைப்பற்றியுள்ளனர்.

அதில் 8 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரின் சிதைக்கப்பட்ட உடல் பாகங்கள் இருந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்