அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு கடிதம் எழுதிய கிம் ஜாங் உன்! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இதனால் அமெரிக்கா வடகொரியா மீது கடும் கோபத்தில் இருந்தது.

டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் வார்த்தை போர்களிலும் ஈடுபட்டனர். அதன் பின் தென் கொரியாவின் முயற்சியினால், இரு நாட்டு தலைவர்களும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்றது. அப்போது அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் உன் பிறகு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் கடந்த 10-ஆம் திகதி நடைபெற்ற வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகனைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இல்லாமல் ராணுவ அணிவகுப்பை கிம் ஜாங் அன் நடத்தி முடித்தார். அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து டிரம்பிற்கு, கிம் ஜாங் உன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவணம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்