அந்தமான் பழங்குடி மக்கள் கொடூரர்களாக மாற யார் காரணம் தெரியுமா? வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அந்தமானில் சென்டினல் தீவுப்பகுதியில் அமெரிக்க இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் அதிர்ச்சி தரும் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்தமானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவில் குடியிருக்கும் பழங்குடிகள் வெளியுலக தொடர்பு ஏதும் இன்றி, நாகரீக மக்களை பார்க்கவே விரும்பாமல் வாழ்ந்து வருகின்றனர்.

மட்டுமின்றி பல காரணங்களால் இந்திய அரசே குறித்த தீவை பாதுகாக்கப்பட்ட பகுதி எனவும், அங்கு வெளியாட்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அமெரிக்க இளைஞர் ஒருவர் சென்டினல் தீவு மக்களின் அம்புக்கு பலியானார்.

இதனையடுத்து அந்த மக்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும், அவர்கள் வெளியுலக மக்களை எதிரிகளாக காண நேர்ந்ததன் காரணமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்டினல் தீவு பழங்குடி மக்கள் கை குலுக்கி எவரையும் வரவேற்பது இல்லையாம். தங்களது விருந்தினரின் மடியில் அமர்ந்து முதுகில் தட்டுவார்களாம்.

ஆனால் இது குறித்த தீவு மக்களிடையே மட்டுமே நடத்தப்படுமாம். வெளியாட்கள் எவரேனும் எல்லை கடந்தால் இவர்களின் அம்பு மட்டுமே பேசுமாம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் பழங்குடி மக்கள் தொடர்பில் ஆராயும் நிபுணர்கள் குழுவும் தனியார் தொலைக்காட்சியினரும் சென்டினல் தீவுக்குள் சென்றதாக தகவல் உள்ளது.

மட்டுமின்றி இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது வெளிநாட்டினர் பலர் சென்டினல் தீவுக்குள் சென்று வந்ததாகவும் ஆதாரங்கள் உள்ளன.

அந்த காலகட்டத்தில் துவங்கியே சென்டினல் தீவு மக்கள் தற்போது காணப்படும் மூர்க்க குணத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.

பிரித்தானியரான Maurice Vidal Portman என்ற கடற்படை அதிகாரி சென்டினல் தீவுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தீவில் சென்ற இவர் அங்குள்ள முதியவரான தம்பதியையும் 4 சிறுவர்களையும் கடத்திச் சென்று அருகாமையில் உள்ள மற்றொரு தீவுக்குள் சிறை வைத்துள்ளார்.

ஆனால் சென்டினல் தீவை விட்டு வெளியே சென்ற அந்த முதியவர்களால் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் சில நாட்களில் கடத்திச் சென்ற சிறார்களை சென்டினல் தீவுக்குள் விடுவித்துள்ளார்.

ஆனால் அந்த கடத்தல் சம்பவமும், முதியவர்களின் மரணமும் சென்டினல் தீவு மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

அதனாலையே, அதற்கு பின்னர் தீவின் எல்லையை தாண்டும் எவராக இருந்தாலும் கொடூர தாக்குதலை முன்னெடுக்கின்றனர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்