இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைக் குறைப்பது தான் எங்களுடைய நோக்கம்: சவுதி அரேபியா

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதுதான் எங்கள் நோக்கம் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வரும் நிலையில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்றார்.

ஏற்கனவே இந்த பயணத்திற்கு திட்டமிட்டிருந்த இளவரசர் சல்மான், புல்வாமா தாக்குதலால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 3 நாள் தாமதத்திற்கு பிறகு வருகை புரிந்தார். பின்னர் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அத்துடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன. இந்நிலையில், இதுகுறித்து இஸ்லமாபாத்தில் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜுபைர் கூறுகையில்,

‘இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பது தான் எங்களுடைய நோக்கம். இரண்டு அண்டை நாடுகளுக்கும் நிலவும் வேறுபாட்டை, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் பாதையை எதிர்நோக்கியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்முத்தை ஆலோசனை நடத்துவதற்காக பாகிஸ்தான் நாடு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers