சவுதி இளவரசரின் உல்லாச படகில் பல மில்லியன் மதிப்பு கொண்ட ஓவியம்... வெளியான ரகசியம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகின் விலையுயர்ந்த ஓவியமாக கருதப்படும் லியானர்டோ டாவின்சி வரைந்த ஓவியத்தை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோனார்டோ டாவின்சி வரை ஓவியங்களில் தலை சிறந்த படைப்புகளின் ஒன்றான சல்வடார் முண்டி என்ற ஓவியம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏலத்தில் விடப்பட்டது.

இந்த ஓவியத்தை பெயர் தெரிவிக்காத விரும்பாத நபர் 450 மில்லியனுக்கு கொடுத்து வாங்கியதாக தகவல் வெளியானது.

ஆனால்விலை போன அந்த ஓவியத்தின் உரிமையாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போது, இந்த ஓவியம் சவுதி பட்டத்து இளவரசர் சல்மானின், உல்லாச படகில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஓவியத்தை, சல்மான் சார்பில், மற்றொரு இளவரசர் பதர் பின் அப்துல்லா ஏலத்தில் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை சவுதி அரசு உறுதி செய்யவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers