இம்ரான்கானை அவமானப்படுத்தினாரா சவுதி இளவரசர்? பாகிஸ்தான் வெளியிட்ட முக்கிய அறிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் பிரதமரை, சவுதி இளவரசர் அவமானப்படுத்திவிட்டதாக செய்தி வெளியான நிலையில், அதை பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 74-வது ஐ.நா சபை பொதுகூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இடையில் சவுதி அரேபியா சென்றார்.

அங்கிருந்து நியூயார் புறப்படவிருந்த இம்ரான் கானுக்கு, தன்னுடைய சிறப்பு விமானத்தை அனுப்பி இம்ரான் கானை வழியனுப்பி வைத்தார் சவுதி இளவரசர்.

அதன் பின் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு, இம்ரான்கான் அந்த விமானத்தில் திரும்பிய போது, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர் நியூயார்க்கில் இறக்கிவிடப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இம்ரான்கான் பயணிகள் விமானம் மூலம் பாகிஸ்தான் சென்றார்.

இதை பிரபல வார நாளிதழ் ஒன்று சவுதி இளவரசர் தான் வழங்கிய விமானத்தை திரும்ப பெற்று பாகிஸ்தான் பிரதமரை அவமானப்படுத்திவிட்டதாக செய்தி வெளியிட்டது.

இதற்கு காரணம், ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான், அங்கு துருக்கி அதிபர் ரிசப் டய்யிப் எர்டோகன் மற்றும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது ஆகியோருடன் உரையாடியதாகவும், அப்போது அவர்களுடன் இணைந்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டணியை உருவாக்குவது குறித்து பேசியதாகவும், இதனால் அதிருபதி அடைந்த சவுதி இளவரசர் அவரை நியூயார்க்கில் இறக்கிவிட்டு, விமானத்தை திரும்ப அழைத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பாகிஸ்தான், சவுதியுடன் எங்களுக்கு நல்ல உறவு நீடிக்கிறது, இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இந்த செய்தி வெளியாகியுள்ளது, முற்றிலும் தவறானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்