கொரோனா வைரஸ் பிரச்சினை... பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோரால் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பிரச்சினை ஆட்டிப்படைக்கும் சீனாவில், தங்கள் பிள்ளைகளுக்கு காய்ச்சல் இருந்ததால், அவர்களை விமான நிலையத்திலேயே விட்டு விட்டு பெற்றோர் விமானம் ஏறியதையடுத்து, விமான நிலைய ஊழியர்களும் பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

இரண்டு பிள்ளைகளுடன் உள்ளூர் விமான நிலையம் ஒன்றிற்கு வந்துள்ளனர் ஒரு சீன தம்பதியர்.

அப்போது அவர்களது மகனுக்கு காய்ச்சல் இருந்ததால், ஏற்கனவே நாடே கொரோனா வைரஸ் பயத்தில் இருப்பதால், அவனை விமானத்தில் அனுமதிக்க முடியாது என்று விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அந்த பெற்றோர்.

அந்த தம்பதி பெரிய கலாட்டாவே செய்ய, கடைசியில் பொலிசார் வந்துதான் சமாதானம் செய்துவைக்க வேண்டியிருந்திருக்கிறது.

உடனே, மகனையும் மகளையும் விட்டு விட்டு அந்த பெற்றோர் மட்டும் விமானம் ஏறிவிட்டனராம்.

இதைக்கண்ட சக பயணிகளும் விமான நிலைய ஊழியர்களும் அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் விழித்திருக்கிறார்கள்.

பின்னர் வேறு வழியின்றி, பிள்ளைகள் இருவரையும் விமானத்தில் ஏற்றி, கேபினுக்கு முன்னால் அமரவைத்துள்ளனர் விமான ஊழியர்கள்.

அந்த சிறுவனும் சிறுமியும் தனித்து விமான நிலையத்தில் சோகமாக அமர்ந்திருக்கும் படத்தை பயணி ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்