கொரோனா வைரஸ்: நோயாளி மீது சோதனை நடத்தி தாய்லாந்து மருத்துவர்கள் வெற்றி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் நோயாளிக்கு இரண்டு வைரஸ் தடுப்பு மருந்துகளின் கலவையுடன் சிகிச்சையளித்த பின்னர் தாய்லாந்து நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் கண்டதாகக் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொடிய கொரோனா வைரஸால் தற்போதுவரை 304 பேர் உயிரிழந்திருப்பதோடு, 14000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் தாக்குதலால் சீனாவில் மட்டுமே உயிர்பலி நிகழ்ந்துவந்த நிலையில், முதன்முறையாக பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதான நபர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அந்த நபர் சீனாவிலிருந்து சொந்த நகரத்திற்கு வந்த பின்னர் ஜனவரி 25 ஆம் தேதி மணிலாவில் உள்ள சான் லாசரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்த நேரத்தில், காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவரது நிலை விரைவாக மோசமடைந்தது, மேலும் அவர் கடுமையான நிமோனியாவை உருவாக்கினார் என்று ABC தெரிவித்துள்ளது.

முன்னேற்றத்தின் அறிகுறி தென்பட்டாலும் அடுத்த 24 மணி நேரங்களில் அவருடைய நிலைமை மோசடைமடைந்து உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

சீனாவை தவிர்த்து வெளிநாட்டில் முதல் உயிர்பலி நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்கள் கழித்து, தாய்லாந்தை சேர்ந்த மருத்துவர் கிரியாங்சாக் அட்டிபோர்ன்விச் முக்கிய மருத்துவ விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 19 பேரில் தற்போது 11 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நோயுடன் 'தீவிர நிலையில்' இருந்த ஒரு நோயாளிக்கு எச்.ஐ.வி மற்றும் குளிர்காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கொடுத்து சோதனை செய்துள்ளனர்.

48 மணி நேரத்திற்குள் அவர் முற்றிலும் நோயற்றவராக அறிவிக்கப்பட்டு வீடு திரும்பியதாக Bloomberg நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்