விமானத்தில் பெண் சடலத்துடன் பயத்தில் பயணித்த 100 பயணிகள்! நரகம் போல் இருந்தது.. விவரித்த இளம்பெண்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணி இறந்த நிலையில் மற்ற பயணிகள் சடலத்துடன் பயணத்தை மேற்கொண்டதுடன் விமான நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் Fort Lauderdale-Hollywood சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Costa Rica நாட்டுக்கு கிட்டத்தட்ட நூறு பயணிகளுடன் ஸ்ப்ரிட் ஏர்லைன்ஸ் விமான சில தினங்களுக்கு கிளம்பியது.

நடுவானில் விமானம் சென்ற போது அதிலிருந்த 83 வயது பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தில் இருந்த நதாலி அலிபினோ என்ற இளம் பெண் விமான மருத்துவ குழுவினருடன் சேர்ந்து மூதாட்டிக்கு அவசர சிகிச்சையளிக்க உதவினார். ஏனெனில் நதாலி செவிலியர் ஆவார். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.

இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க பயணிகள் கோரினார்கள், மேலும் சடலத்தை தனியாக வைக்கும்படியும் விமான ஊழியர்களிடம் கேட்டார்கள்.

ஆனால் விமானத்தை விமானி அவசரமாக தரையிறக்கவில்லை, இதோடு சடலத்தை போர்வையால் போர்த்தாமல் அப்படியே வைத்தனர்.

இதனால் பயணிகள் சடலத்துடன் பயந்தபடியே பயணம் செய்தார்கள்.

இது குறித்து நதாலி கூறுகையில், விமானத்தில் இருந்த ஊழியர்களுக்கு அவசர நிலையை எப்படி கையாள வேண்டும் என தெரியவில்லை, இதற்கான பயிற்சியை அவர்கள் பெறாதது அதிர்ச்சியளிக்கிறது.

சடலத்துடன் இருந்தது நரகத்தில் இருப்பது போல இருந்ததாக அனைத்து பயணிகளும் கூறினார்கள். பேய் படத்தை பார்ப்பது போல திகிலாக இருந்தது.

வயதான பெண்களை பாதுகாப்பதற்கான உபகரணங்களும் அங்கு இல்லை.

நான் என் திருமணம் தொடர்பான விடயத்துக்காக விமானத்தில் சென்றேன், ஆனால் இது போன்ற அசம்பாவிதம் நடந்துவிட்டது.

விமான தரையிறக்கப்பட்ட பின்னரும் உடனடியாக சடலத்தை கீழே இறக்கவில்லை, எல்லா பயணிகளும் அதை கடந்தே சென்றார்கள் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக விமானத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தை உடனடியாக கீழே இறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த ஒரு கடினனமான சூழலையும் சமாளிக்கும் திறனை எங்கள் ஊழியர்கள் கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...