சீனா விமானத்தை தைவான் சூட்டு வீழ்த்தியதாக இணையத்தில் பரவும் வீடியோ: உண்மை என்ன?

Report Print Basu in ஏனைய நாடுகள்
346Shares

சீனா விமானத்தை தைவான் சுட்டு வீழ்த்தியதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

வீடியோவில், கிராம பகுதியில் விமானம் போன்ற ஒன்று விழுந்து எரி வதை காட்டுகிறது.

சீனாவிற்கு சொந்தமான Su-35 ரக விமானம் அதன் வான்வெளியை மீறி தைவானிற்குள் நுழைந்ததாகவும், அந்த விமானத்தை தைவான் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால், இது ஒரு பொய்யான செய்தி என சீனா தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், தைவான் ஜலசந்தியில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனா-தைவான் இடையே போரைத் தூண்டுவதற்கு உளவியல் யுத்த தந்திரங்களை பயன்படுத்துவதாக சீனா இந்தியா மீது குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்