வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவி நீண்ட காலமாக கண்ணில் படாததால், அவர் உடல் நலமின்றி இருக்கிறாரா என்ற சந்தேகமும், கொல்லப்பட்டிருக்கலாமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
வடகொரியாவின் முதல் பெண்மணியும் அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவியுமான ரி சோல் ஜு (31) ஜனவரி மாதம் 25ஆம் திகதிக்கு மேல் பொது நிகழ்ச்சிகளில் காணப்படாததால் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 25ஆம் திகதி Pyongyangஇலுள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கிம்மும் அவரது மனைவியும் ஜோடியாக பங்கேற்றனர்.
அவர்கள் இருவரும் கிம்மின் அத்தையான Kim Kyong-hui (74) என்பவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.

ஆனால், அதற்குப்பின் பல தேசிய நிகழ்ச்சிகள் பல நடந்த நிலையிலும், அவை ஒன்றிலும் ரி சோல் ஜு கலந்துக்கொண்டதாக தெரியவில்லை.
அதனால், ஒரு வேளை ஈவிரக்கமில்லாத கிம் மனைவியையும் கொன்றுவிட்டாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே அத்தையான Kim Kyong-huiஇன் கணவரான Jang Song-thaek(67)ஐ, கிம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொன்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

