ராதாவின் சிரிப்பும்.....விராட் கோஹ்லியும்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துடன் 2 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதால் நேற்று அயர்லாந்து புறப்பட்டு சென்றது.

டெல்லி விமான நிலையத்தில் இந்திய வீரர்கள் இருந்தபோது, ராதா என்று சிறுமி விராட் கோஹ்லியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என அடம் பிடித்துள்ளார்.

அப்போது அந்தச் சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, விராட் கோஹ்லி புகைப்படம் எடுத்துக்கொண்டார். விராட்டின் பக்கத்தில் நின்றுகொண்டு புகைப்படத்திற்கு அழகாக சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் ராதா.

அயர்லாந்து அணியுடம் வரும் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 டி20 போட்டிகள் விளையாடும் இந்திய அணி, அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இங்கிலாந்துடன் உடனான தொடரில் 3 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா விளையாடுகிறது. ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers