ஹாட்ரிக் சதத்தை விளாசும் ஆவலில் கோஹ்லி! இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் கோஹ்லி ஹாட்ரிக் சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது

தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டிரா ஆனது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் சதம் விளாசிய கோஹ்லி மூன்றாவது போட்டியிலும் ஹாட்ரிக் சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்