ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் அவ்வளவுதான்: பிசிசிஐ

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பையில் இந்திய வெற்றிபெற்றாலும் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் பதவியை நீட்டிக்க முடியாது என தெரியவந்துள்ளது பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். இதுதவிர பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என உதவி பயிற்சியாளர்களாக பேட்டிங்கிற்கு சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பயிற்சியாளர்களாக பொறுப்பேற்ற இவர்களின் பதவிக்காலம் வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவடைகிறது.

முன்னதாக ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றியது.

இந்திய அணி, வரும் உலகக்கோப்பையை வென்றால், அவரே பயிற்சியாளராக தொடர வேண்டும் என கேப்டன் கோலி உள்பட் பெரும்பாலான வீரர்கள் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்ததும் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்கவோ அல்லது ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ முடியாது என தகவல் தெரியவந்துள்ளது. இதுதான் பிசிசிஐ-யின் முடிவுஎன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்