நம்ம பையன் கொன்றுவிட்டான்... யாரை வாழ்த்துகிறார் சுரேஷ் ரெய்னா?

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா வங்க தேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய திரில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சுரேஷ்ரெய்னா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இந்தியா - வங்காள தேச அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து 314 ஓட்டங்கள் எடுத்தது.

315 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களம் இறங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.

அதன் பின்னர் கே.என்.ராகுல், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து களம் இறங்கி சொர்ப ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து டோனி-ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்கினர்.

எப்படியும் ரிஷப் அரை சதத்தினை கடந்து விடுவார் என நினைத்த நிலையில், ரிஷப் 41 பந்துகளில் 48 ஓட்டஙகள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்நிலையில் ரிஷப் பண்டின் ஆட்டம் சிறப்பாக இருந்தாக ரசிகர்கள் பலர் தெரிவித்தனர்.இதனை அடுத்து, கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், நம்ம பையன் ரிஷப் பண்ட் ஆட்டத்தை சிறப்பாக விளையாடி கொன்றுவிட்டான். நம்பிக்கையான ஆட்டம். அதி சிறப்பான ஆட்டம் என்னு தனது பாராட்டை பதிவு செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...