கணினி மொழி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் ரோபோக்களின் வளர்ச்சியானது மிகவும் அபரிமிதமானதாக இருக்கின்றது.
இந்த வரிசையில் தற்போது சிறிய ரோபோ கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Mirobot என அழைக்கப்படும் இந்த கையானது வீடு, பாடசாலை மற்றும் தொழில் ரீதியாக பயன்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்றது.
ஆறு அச்சுக்களை கொண்ட இந்த ரோபோ கை உருவாக்கப்பட்டுள்ளமையினால் நுணுக்கமான பணிகளைக் கூட இலகுவாக மேற்கொள்ள முடியும்.
தற்போது நிதி திரட்டும் நோக்கில் Kickstarter தளத்தில் இக் கை விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் Mirobot ஆனது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.