வங்கிகளில் வழங்கப்படும் கிரடிட் கார்ட் போன்று ஆப்பிள் நிறுவனமும் வழங்கவுள்ளதாக ஏற்கணவெ செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தற்போது இக் கிரடிட் கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை மக்கள் ஆர்டர் செய்துகொள்ள முடியும்.
ஆர்டர் செய்தவர்களுக்கான கிரடிட் கார்ட்டினை டெலிவரி செய்வதற்கும் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது.
முதன் முதலில் அமெரிக்காவில் மாத்திரமே இக் கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் ஏனைய சில நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனைப் பயன்படுத்தி ஆப்பிள் உற்பத்திகளை தவணைக் கொடுப்பனவு முறையில் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடிவதுடன், மிகவும் குறைந்தளவு வட்டியே அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.