திருமணத்தின்போது தீவில் உலக கோடீஸ்வரர் பில்கேஸ்ட் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
309Shares
309Shares
lankasrimarket.com

புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரும், உலக கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் தனது காதல் மனைவியான மெலிந்தாவை முதல் முதலாக பணி நிமித்தமான கருத்தரங்கு ஒன்றில் வைத்து சந்தித்துள்ளார்.

இந்த கருத்தரங்கில் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக அறிமுகமாகிக்கொண்ட இவர்கள், பின்னர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் சந்தித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த சந்திப்புகளே, இவர்களது மனதில் காதல் கதவினை திறந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மனதுக்குள் மறைத்துவைத்திருந்த காதலை இருவரும், மறைமுகமாக வார்த்தைகளால் தெரியப்படுத்திக்கொண்டிருந்தனர்.

இருப்பினும், ஒரு நாள் மெலிந்தாவை சந்தித்து தனது காதலை தெரியப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்ட பில்கேஸ்ட்ஸ், தன்னுடன் ஒருநாள் இரவு உணவருந்த வருமாறு மெலிந்தாவை அழைத்து சென்று மனம்விட்டு பேசியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அடுத்த 6 மாதத்தில் 1994 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் ஹவாய் தீவில் உள்ள Manele Bay ஒட்டலில் நடைபெற்றது.

தனது திருமணத்திற்காக இந்த ஒட்டலில் உள்ள அனைத்து அறைகளையும் முன்கூட்டியே புக் செய்துவிட்டார் பில்கேட்ஸ்.

அதுமட்டுமின்றி தனது திருமணத்தின்போது தேவையற்ற பார்வையாளர்கள் இருக்கக்கூடாது என்பதற்காக அந்த தீவில் உள்ள அனைத்து ஹெலிகொப்டர்களையும் புக் செய்துவிட்டார்.

போர்ப்ஸ் நாளிதழின்படி பில்கேஸ்ட்ஸின் திருமண செலவு 1 மில்லியன் டொலர் ஆகும்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்