சகோதரர்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர அண்ணன்: மிரள வைக்கும் காரணம்?

Report Print Basu in தெற்காசியா
730Shares
730Shares
ibctamil.com

பாகிஸ்தானில் 500 ரூபாய் தர மறுத்த தனது இரண்டு இளைய சகோதரர்களை, அண்ணன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முஷ்டாக். இவர் தனது இளைய சகோதரர்களான முகமது உமர், அபுபக்கர் ஆகியோரிடம் ரூ.500 கேட்டுள்ளார். ஆனால் பணம் தர அவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த முஷ்டாக், தனது சகோதரர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். பின்னர், தன்னையும் தீக்கிரையாக்கியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் மூன்று சகோதரர்களையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்னர். அவர்கள் மூவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முஷ்டாக ஒரு குடிகாரர் என்றும், சகோதரர்களை தாக்கிய போது அவர் சுய நினைவில் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments