இந்தியரின் நோபல் பதக்கத்தை திருடிய கும்பல்: பொலிசார் தீவிர விசாரணை

Report Print Peterson Peterson in தெற்காசியா

இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் நல ஆரவலரான கைலாஷ் சத்தியார்த்தி என்பவருக்கு அளிக்கப்பட்ட நோபல் பதக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லியை சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி என்பவர் குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராடி வருபவர்.

கைலாஷின் சேவையை பாராட்டி கடந்த 2014-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலாவும் இந்த நோபல் பரிசை பகிர்ந்துக்கொண்டார்.

இந்நிலையில், டில்லியில் உள்ள கைலாஷின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நோபல் விருது பதக்கமும், அதற்கான சான்றிதழும் திருடு போயுள்ளதாக கைலாஷ் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

மேலும், பதக்கத்தை திருடியது மட்டுமில்லாமல் பிற விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையிட்டுள்ளதாக கைலாஷ் புகார் அளித்துள்ளார்.

கைலாஷின் புகாரை பெற்ற பொலிசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments