நட்சத்திர ஹொட்டலில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: வெளிநாட்டவர்களுக்கு இலக்கு?

Report Print Arbin Arbin in தெற்காசியா

பாகிஸ்தான் நட்சத்திர ஹொட்டலில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பலோசிஸ்தான் மாகாணத்தின் குவாதர் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் மூன்று பேர் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் ஹொட்டலில் நுழைந்துள்ளதாக பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

தகவலை அறிந்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் ஹொட்டலில் நுழைய முயற்சித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணியில் நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

குவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழப்பு குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட ஹொட்டலானது வெளிநாட்டவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அதிகம் பயன்படுத்திவருவதாக கூறப்படுகிறது.

குவாதர் நகரில் ஒரு வாரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்