முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தியவர் ராவணன் தான்!

Report Print Kavitha in சிறப்பு

இதிகாசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய ராமயணத்தில் ஆகாயம் மார்க்கமாக ராவணன் விமானத்தில் சீதையை கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்ததாக புராணங்கள் கூறுகின்றது.

அதில் இராவணன் புஷ்பக விமானம் என்ற விமானத்தை வைத்திருந்தாக நம்பப்படுகின்றன.

இதுகுறித்து இலங்கை அரசு 5,000 ஆண்டுகளுக்கு முன்பாக விமானத்தில் பறந்து சென்ற இராவணன் தான் உலகின் முதல் விமானி என்று கூறி வருகிறது.

இதனை ஆதார பூர்வமான நிரூபிக்க இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பத்திரிகைகளில் “ராவணன்தான் முதல் விமானி. இதை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் இருந்தால் அரசுக்கு தெரிவிக்கலாம் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் மன்னர் ராவணன் தொடர்பான டாக்குமென்ட் அல்லது புத்தகம் இருந்தால் அரசிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அரசு ஆராய்ச்சியை நடத்துவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்கே ஒரு ஊடகம் ஒன்றிற்கு போட்டி வழங்கும் போது “ராவண மன்னர் ஒரு மேதை. இவர் ஒரு விமானி.

ஆகாயத்தில் பறந்த முதல் நபர் அவர்தான். இது ஒரு புராணக்கதை அல்ல. இது உண்மை. இதுகுறித்து விளக்கமான ஆராய்ச்சி தேவை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை நாங்கள் நிரூபிப்போம்’’ என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்