இலங்கையில் போதைப்பொருள் கடத்திய பூனையை சிறையில் அடைத்த பொலிசார்... தப்பிய பலே கில்லாடி பூனை!

Report Print Balamanuvelan in இலங்கை
1066Shares

இலங்கை சிறை ஒன்றில் கழுத்தில் போதைப்பொருள் பொட்டலத்துடன் பிடிபட்ட பூனை ஒன்று தப்பிவிட்டதாக செய்தி வெளியானது.

இலங்கையில் உள்ள சிறை ஒன்றிற்குள் நுழைந்த பூனை ஒன்றின் கழுத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பை இருப்பதை அதிகாரிகள் கவனித்து அதை பிடித்துள்ளனர்.

அந்த பிளாஸ்டிக் பைக்குள் ஒரு இரண்டு கிராம் ஹெராயின், இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டு ஆகியவை இருந்துள்ளன.

ஆகவே, அந்த பூனை சிறையில் உள்ள அறை ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டது. ஆனால், அது ஞாயிற்றுக்கிழமை சிறையிலிருந்து தப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், சற்று முன் கிடைத்த செய்தி ஒன்றில், அந்த பூனை சிறை வளாகத்திற்குள்ளேயே சுதந்திரமாக சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை கழுத்தில் போதைப்பொருளுடன் பிடிபட்ட அந்த பூனை, ஞாயிறன்று சிறையிலிருந்து தப்பி, திங்கட்கிழமை மீண்டும் பிடிபட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்