இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? கடும் வேதனையில் முத்தையா முரளிதரன்

Report Print Santhan in இலங்கை

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் இலங்கை தமிழனாக பிறந்தது என தவறா என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான விஜயசேதுபதி, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார்.

படத்திற்கான பர்ஸ் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது. அதற்கு 800 என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு திரைப்பிரபலங்கள் பலரும், விஜய்சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது, முத்தையா முரளிதரண் தமிழர்கள் செத்து கொண்டிருந்த போது, இன்றைய நாள் இனிய நாள் என்று கூறியவர் என்று அவரைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் விஜயசேதுபதி இன்னும் ஓரிரு நாட்களில் இப்படத்தில் நடிக்கலாமா? வேண்டமா? என்பது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் செய்தி வெளியானது.

இதையடுத்து தற்போது முத்தையா முரளிதரன் இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், என்னை தமிழினத்திற்கு எதிரானவன் போல் சித்தரிப்பது வேதனையாக உள்ளது.

ஒரு போதும், நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிவிக்கவும் இல்லை, ஆதரவிக்கவும் மாட்டேன். சிங்களர்களாக இருந்தாலும், ஈழத்தமிழர்களாக இருந்தாலும், அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.

நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலே, என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது.

நான் இந்தியாவில் பிறந்து வளர்ந்திருந்தால், நான் இந்திய அணியில் இடம் பெற முயற்சித்திருப்பேன், எனவே இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா? ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள்.

போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது. என் பள்ளிகாலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறு நாள் உயிருடன் இருக்க மாட்டார். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம்.

நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவு தான். 2009-ஆம் ஆண்டுதான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019-ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.

எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ்வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றுமொரு தவறான செய்தி.

இப்படம் குறித்து என்னை தயாரிப்பு நிறுவனம் அணுகிய போது முதலில் மறுத்தேன்.

முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லை என்பதால், இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள், என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதால் இதற்கு ஒப்புக்கொண்டேன்.

எனக்கு ஏழு வயதாக இருக்கும் போது என் தந்தை வெட்டப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர்.

போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும், இந்த சூழலில் இருந்து கிரிக்கெட் அணியில் இணைந்து நான் எப்படி சாதித்தேன் என்பது உணர்த்தும் படம் தான் 800 என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்