சுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் புதிய மாற்றம்!

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வதிவிட அனுமதி பெற்றுள்ள வெளிநாட்டவர்களுக்கு கிரெடிட் கார்டு அளவிலான புதிய அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது காகிதத்தினால் ஆன வதிவிட அனுமதிக்கு பதிலாக இந்த கார்டுகள் வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 1ம் திகதிக்குள் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், அதில் குறித்த நபரின் புகைப்படம் மற்றும் கையெழுத்து இடம்பெற்றிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயோமெட்ரிக் தகவல்களான கைவிரல் ரேகை பதிவு மற்றும் முகம் ரேகை பதிவு ஆகியவை தவிர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் மற்றவர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி தவறு நடைபெறுவதை தடுப்பதற்கே என கூறப்பட்டுள்ளது.

புதிய அட்டையை ஜூலை 1 2019 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 2019 ஆம் தேதி வரை மாற்றம் செய்து கொள்ள காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

EU மற்றும் EFTA நாடுகளை தவிர்த்து மற்ற வெளிநாட்டவர்களுக்கு இந்த மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers