சந்தேகத்துக்கிடமான முறையில் சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்ட நபர்: காரில் என்ன இருந்தது தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜூரா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர்.

அந்த கார் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது.

காரின் பின் பகுதியை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் ஏராளமான இறைச்சி இருப்பதைக் கண்டனர்.

கிட்டத்தட்ட 300 கிலோ இறைச்சி அந்த காரில் இருந்தது.

காரில் இறைச்சியை கடத்த முயன்ற அந்த 29 வயது துருக்கியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது சுங்கம் தொடர்பான குற்றங்கள் மற்றும் உணவு கடத்தல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த நபர், கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கபாப் ஆகியவற்றை தனது காரில் கடத்தும்போது பிடிபட்டார்.

கைப்பற்றப்பட்ட இறைச்சி அழிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers