தாயின் கருவிலிருக்கும் குழந்தையின் சிறுநீரக அடைப்பை அகற்றும் கருவி: சுவிஸ் அறிவியலாளர்கள் சாதனை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

உலகிலேயே மிகச்சிறிய ஸ்டெண்ட் (stent) என்னும் கருவியைக் கண்டுபிடித்துள்ள சுவிஸ் அறிவியலாளர்கள், அந்த கருவியை பயன்படுத்தி, தாயின் கருவிலிருக்கும் குழந்தையின் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஸ்டெண்ட்கள் எனப்படும் கருவிகள், பொதுவாக இதயத்திலுள்ள இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுபவை.

தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டெண்ட்கள், வழக்கத்திலிருக்கும் ஸ்டெண்ட்களை விட 40 மடங்கு சிறியவையாகும்.

சூரிச்சிலுள்ள ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டெண்ட்கள், 0.05 மில்லிமீற்றர் அகலமும், 0.5 மில்லிமீற்றர் நீளமும் கொண்டவையாகும்.

தாயின் கருவிலிருக்கும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில், சிறுநீரகக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்வதற்காக இந்த ஸ்டெண்ட் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த ஸ்டெண்டை சுருக்கி, சிறுநீரக பாதையில் பாதிக்கப்பட்ட இடத்திற்குள் அனுப்பும்போது, அது மீண்டும் விரிவடையும் நேரத்தில், அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கி விடும்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக, மனிதர்களில் சோதிக்கப்படுவதற்குமுன், இவை விலங்குகளில் சோதித்து பார்க்கப்பட உள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்