இசைக்காக அதிக பணம் செலவு செய்யும் சுவிற்சர்லாந்து மக்கள்

Report Print Vijay Amburore in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து மக்கள் ஆண்டுதோறும் இசைக்காக அதிக தொகையை செலவிடுவதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலான மக்கள் தங்களுடைய மனக்கவலை மற்றும் தனிமையை போக்குவதற்காக பாடல்களை அதிகம் விரும்பி கேட்பார்கள். சமீப காலங்களில் இதற்காக பணம் செலுத்தியும் ஆன்லைனில் பாடல்களை கேட்டும், பதிவிறக்கம் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க பொருளாதார நிபுணர் ஆலன் பி. க்ரூகர் தனது புதிய புத்தகமான ராக்கோனோமிக்ஸ்-இல், சுவிஸ் மக்கள் இசைக்காக அதிக பணம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தொழில் கூட்டமைப்பின் 2018ம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, சுவிற்சர்லாந்தில் ஸ்ட்ரீமிங் வருவாய், பதிவிறக்கங்கள், பதிவு மற்றும் குறுவட்டு விற்பனை மூலம் அனைத்து வகைகளிலிருந்தும் இசை சுமார் 170 மில்லியன் பிராங்குகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணம் பெரும்பாலும் வெளிநாட்டு கலைஞர்களுக்கு சென்றடைவதாக சர்வதேச தொழில் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் லோரென்ஸ் ஹாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதில் அதிமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆதிக்கம் செலுத்துவதாக கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...