குடியிருப்பில் இந்த சீஸ் உங்களிடம் இருந்தால் கவனம்: எச்சரிக்கை விடுத்த சுவிஸ் நிறுவனம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் Migros நிறுவனம் தங்களின் தயாரிப்பான Grogonzola e Mascarpone சீஸை பயன்படுத்த வேண்டாம் என வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

குறித்த Grogonzola e Mascarpone சீஸ் பயன்படுத்துவதால் லிஸ்டீரியா நோய் தாக்குதல் ஏற்படுவதை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து வணிவக வளாகங்களில் இருந்து குறித்த தயாரிப்பை திரும்ப பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட சீஸ் உணவை அதிகம் எடுத்துக் கொள்ள நேரிட்டால் காய்ச்சல், தலைவலி, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படலாம் எனவும், அது லிஸ்டீரியாவ இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், இதுபோன்ற அறிகுறிகள் ஏதும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவர்களை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் Grogonzola e Mascarpone சீஸ் சேமித்து வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதை குறிப்பிட்ட Migros நிறுவன கிளைகளில் ஒப்படைக்கலாம் எனவும், அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்