சுவிட்சர்லாந்தில் இனி கொரோனா பரிசோதனை இலவசம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தத்திலிருந்தே, சுவிட்சர்லாந்தில் கொரோனா பரிசோதனை செய்ய விரும்புவோர் அதற்கான செலவை தாங்களேதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது.

பின்னர், மார்ச் 4 அன்று கொரோனா பரிசோதனை செய்வோர் இன்சூரன்ஸ் கிளைம் செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்தது.

சிலருக்கு இதனால் 90 சதவிகித செலவு மிச்சமானது. ஆனால் மற்றவர்கள் மொத்த செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. சில இடங்களில் முழுத் தொகை, சில இடங்களில் 50 சதவிகிதம் என இது மாகாணத்துக்கு மாகாணம் வேறுபட்டது.

சுவிட்சர்லாந்தின் கட்டாய மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், மக்கள் தங்களுக்கான மருத்துவ செலவில் 10 சதவிகிதத்தை தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

சிலர் 10 சதவிகித தொகை மட்டும் செலுத்த வேறு சிலருக்கோ இன்னும் அதிக தொகை செலுத்தவேண்டியிருந்தது.

இதனால் மக்களின் கஷ்டத்தை உணர்ந்துகொண்ட சுவிட்சர்லாந்து பெடரல் அரசு, 25 ஜூன் 2020 முதல் கொரோனா பரிசோதனைக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது.

கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு அவர்கள் எந்த வகை சோதனை மேற்கொண்டிருந்தாலும், பரிசோதனைக்காக செலவிட்ட தொகையை திரும்ப கொடுத்துவிடுவதாக சுவிஸ் பெடரல் அரசு அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்