சுவிஸ் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக அரசு அளித்துவரும் உதவி, இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தடைபடக்கூடாது என்பதற்காக, அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின்படி, இந்த ஆண்டு இறுதிவரை நிறுவனங்களுக்கு அரசின் உதவி தொடரும்.
அந்த நிதி 14 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதிகப்படியான செலவு நிறுவனங்கள் மீது சுமத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வேலையில்லாத்திண்டாட்டமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.