விடுமுறைக்காக சுவிட்சர்லாந்திற்கு வந்து திருட்டு வழக்கில் சிக்கிய பிரித்தானிய குடும்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் கேரவன் திருடிய வழக்கில் பிரித்தானிய குடும்பம் ஒன்று சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளது.

பாஸல் மண்டலத்தின் Duggingen பகுதியில் கடந்த 2020 மே மாதம் கேரவன் ஒன்றை திருடிய சம்பவத்தில், நால்வல் அடங்கிய பிரித்தானிய குடும்பம் ஒன்று கையும் களவுமாக சிக்கியது.

சுமார் 78,000 பிராங்குகள் மதிப்பிலான கேரவனை இன்னொரு வாகனத்துடன் இணைத்து இழுத்துச் செல்ல முற்படும் போது பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

மட்டுமின்றி, கேரவன் வண்டியுடன் தப்ப முயன்ற சாரதியை ரத்த பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவர் போதை மருந்து உட்கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

பிரித்தானியர்களான நால்வரும் கடந்த 10 மாதங்களாக சுவிட்சர்லாந்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், புதன்கிழமை முதல் இந்த வழக்கு தொடர்பில் குற்றவியல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

அரசு தரப்பு மேற்கொண்ட விசாரணையில், குறித்த நால்வரும் திட்டமிட்டே கேரவன் வாகனத்தை திருடியதாகவும்,

திருடுவதற்கு என்றே இவர்கள் பிரித்தானியாவில் இருந்து அடிக்கடி சுவிஸ் புறப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி ஏற்கனவே 266,000 பிராங்குகள் மதிப்பிலான 2 கேரவன் திருடப்பட்ட நிலையில், அது தொடர்பிலான விசாரணையும் முன்னெடுக்கப்படுகிறது.

திருட்டு வழக்கில் சிக்கிய பிரித்தானியர்கள் நால்வருக்கும் தலா 3 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத்தண்டனையும்,

8 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் பிரதான திருப்பமாக, கொள்ளை கும்பல் ஒன்று, தங்களை மிரட்டி கேரவன் திருட வைத்ததாகவும்,

அவர்களுக்கு தாங்கள் கடன்பட்டுள்ள பணத்திற்காகவே, தங்களை அவர்கள் கேரவன் திருட கட்டாயப்படுத்தியதாகவும் பிரித்தானியர்கள் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்