பிரித்தானியாவில் எவ்வளவு தீவிரவாதிகள் தற்போது உள்ளனர்? வெளியான தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தற்போது 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என அந்நாட்டின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த திங்களன்று ஆரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்த பின்னர் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியது லிபியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, பிரித்தானியாவில் வாழ்ந்த சல்மான் அபேதி (22) என்னும் ஐ.எஸ் தீவிரவாதி என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், பிரித்தானியாவில் தற்போது 23000 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டின் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் சந்தேகப்படும்படியான 3 ஆயிரம் பேர் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற 20,000 பேர் முந்தையை விசாரணைகளின் அடிப்படையில் எஞ்சிய ஆபத்துகள் என்ற வகையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையில், மான்செஸ்டரில் தாக்குதல் நடத்திய அபேதியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் 14 இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments