லண்டனில் அதிகாலையில் டிரைவருக்கு நேர்ந்த கதி: மர்ம நபர்கள் அட்டகாசம்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனின் கேப் டிரைவரை மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கல்லூரி சாலையில் அதிகாலையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் கருப்பு நிற காரில் இருந்த டிரைவரை மிரட்டிய இரண்டு நபர்கள், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த டிரைவர் உடனடியாக தனது காரின் கதவை அடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த இரண்டு பேரில் ஒருவர் டிரைவரின் கால் மற்றும் கையில் கத்தியை வைத்து கொடூரமாக பல முறை குத்தியுள்ளான்.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு பொலிசார் வருவதற்குள், இரண்டு பேர் தப்பியுள்ளனர்.

காயங்களுடன் இருந்த டிரைவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து மெட்ரோ பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தால் 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதே தவிர, உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை, தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் வயது 20-க்கும் மேல் தான் இருக்கும் என்று சந்தேகப்படுவதாகவும், பொதுமக்களுக்கு இது குறித்து தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்